Pages

Friday, April 13, 2007

Tamil New Year Day..15th April 2007


புதிய தமிழ் புத்தாண்டு ஸர்வஜித் 15 ஏப்ரல் 2007 அன்று பிறக்கிறது.


தமிழ் புத்தாண்டு தினமான அன்று உலகத்தமிழர் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று சீரும் சிறப்பாக வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்.
On the Happy Occasion of the Tamil New Year Day on 15th April 2007, let us all Pray to God Almighty to shower on All Tamils of the World all the Prosperity.
Let us recall the first stanza of Nalvazhi compiled by the Great Tamil Poetess Avvayar on this Grand Occasion.
அவ்வையார் இயற்றிய நல்வழி விநாயகக் கடவுள் துதியுடனே துவங்கும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் ‍ கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

பொருளாவது:

அழகினை செய்கின்ற மேலான யானை முகத்தைக் கொண்ட தூய்மையுடைத்த மாணிக்கத்துக்கு ஒப்பான வினாயகனே !

நல்ல பசுவின் பாலும், தெளிந்த தேனும், வெல்லப்பாகும், பருப்பும் ஆகிய நான்கு பொருட்களையும் கலந்து நான் உனக்கு நிவேதனமாக‌ அர்ப்பிக்கிறேன். உன்னிடமிருந்து வேண்டுவது ஒன்றே. மூன்று சங்கங்கள் வளர்த்த மூன்று தமிழ் (இயல், இசை, நாடகம்) அடங்கும் யாவற்றையும் எனக்கு அருள்வாயாக.

Sunday, April 01, 2007

What is a lie? What can we call as "true" ?

பொய் என்றால் என்ன? உண்மை என்றால் என்ன?

What is a Lie? What is Truth?

நடப்பது, நடந்தது, யாவையுமே நாம் அறிந்தவாறு சொல்வது உண்மை.பார்த்த, பார்க்கின்ற எல்லாவற்றையும் நாம் உணர்ந்தவாறு சொல்வது உண்மை.
When we narrate what happened or happens in the way we understood them it would be true.

கேட்ட, கேட்கின்ற எல்லாவற்றையும் நாம் புரிந்தவாறு சொல்வது உண்மை.
When we say what we heard or hear in the way we understood them, it is true.

இவ்வாறு உண்மைக்குப் பொருள் சொல்லப்போனால், உண்மை என்று நாம் எவற்றை கருதுகிறோமோ அவை அவரவர் புலன்களின் தன்மையை ஒட்டி அமையும் என்பது புலப்படுகிறது.
So, when we attempt to seek a definition of "truth", it is apparent that both truth and falsehood depend on the perceptions which are but the end results of the effectiveness of their sensory organs.

உதாரணமாக, ஒருவருக்கு பார்வை மங்கியிருந்தால், அவர், தான் காணும் நிறங்களை சரிவர கூற முடியுமா? கரும் பச்சையை கருப்பு என்றோ பச்சை என்று அவர் சொன்னால் அவர் பொய் சொல்கிறார் எனக்கூறலாமா?
A person whose vision is blurred can describe a dark blue as black. Is it that this person lies?

அதேபோல், ஒருவருக்கு ஒரு பொருளினைப்பற்றி ஒன்றுமே தெரியாதபோது, அதை திடீரென காண்கையில், அதை அவரால் சரிவர விவரிக்க இயலாது. அப்போதும் அவர் பொய் கூறுகிறார் எனச்சொல்ல இயலாது.
In the same way, when a person does not have any apriori knowledge of a particular thing, he may not be able to describe of the thing he sees. Then also, it is not correct to say that the person lies.

ஆக, உண்மை, பொய் இரண்டுமே அவரவர் உணர்ந்து உள்வாங்கிக்கொண்ட நிலையின் அடிப்படையிலேதான் உள்ளன்.
Truth and Falsehood are therefore based on the physical and mental perceptions of the concerned individuals.

ஆனால், இவ‌ற்றைத்த‌விர‌, ம‌ற்றொரு கோண‌த்திலும் பொய், உண்மைத‌னை ஆராய‌லாம்.
Apart from this we can approach the subject of truth and falsehood from a different angle and approach
.Let us hear what Bharathi sing:

பாட்டுக்கொரு புல‌வ‌ன் பார‌தி பாடுவ‌தைக்கேட்போம்:

" நிற்ப‌துவே, ந‌ட‌ப்ப‌துவே, ப‌ற‌ப்ப‌துவே
.அத்த‌னையும் சொப்ப‌ன‌ந்தான்..

"All standing,walking flying ...all just dreams !"

சொப்ப‌ன‌ம் என்றால் க‌ன‌வு, க‌ன‌வு என்றால் அது உண்மையில்லாத‌து. நாம் நிற்கிறோம், ந‌ட‌க்கிறோம், விமான‌ங்க‌ளில் ப‌ற‌க்கிறோம், ப‌ற‌வைக‌ள் ப‌ற‌க்கின்ற‌ன. இவ‌ற்றை எல்லாவ‌ற்றையுமே உண‌ர்கிறோம். இவ‌ற்றை எப்ப‌டி உண்மை யில்லை என்று சொல்ல‌முடியும்? இருப்பினும், எது அழிய‌க்கூடிய‌தோ அது உண்மையில்லை. இது த‌த்துவ‌ அணுகுமுறை.

In the perception of Bharathi, the Tamil Poet, whatever is transient, is also not true. This is a philosophical approach.

வ‌ள்ளுவ‌ர் கூறுவார்:

த‌ன் நெஞ்சு அறிவது பொய்ய‌ற்க‌ ; பொய்த்த‌பின்
த‌ன் நெஞ்சே த‌ன்னைச்சுடும்.
Having known the truth, never say what is false (untrue), as your own mind indicts you.

மெய்த‌னை அறிந்த‌பின்னும், மெய்யில்லாவ‌ற்றைச் சொல்வ‌தே பொய். அப்ப‌டி சொல்லும்போது ந‌ம‌து ம‌ன‌மே ந‌ம்மை காய்கிற‌து. சுடுகிற‌து.

அவ்வாறு சுடுகிறதா? ந‌ம‌க்கு நாமே ப‌தில் சொல்லிக்கொள்வோம்.
Do we get indicted when we tell a lie. Let us reflect.